தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவம்பர் 18) தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து ரெட் அலெர்ட்டும் கொடுத்துள்ளது. 


அதன்படி சென்னையில் தற்போதிருந்தே பல இடங்களில் கனமழை கொட்ட ஆரம்பித்துள்ளது. அதேபோல் திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்ய தொடங்கியிருக்கிறது.


 






இதற்கிடையே சென்னையில் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். மழையின் தீவிரத்தை பொறுத்து நாளை மேலும் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என கருதப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Heavy Rain Alert: ‛கொட்டோ கொட்டுனு கொட்டப்போகிறது...’ -வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!


திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை: நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கும் அபாயம்!