தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர வரும் ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
2024-2025 கல்வியாண்டிற்கான உடற்பயிற்சி தொடர்பான பி.எஸ்சி., பிபி.எட்., எம்.பி.எட்., எம்.எஸ்சி., யோகா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
படிப்புகளின் விவரம்
+2 படித்து முடித்தவர்கள், ஏதாவது துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் பங்கேற்றவர்கள், 10+2+3 என்ற முறையில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க ரூ.500யும் பட்டியலின/பழங்குடியின பிரிவினர் ஆகியோர் ரூ.250யும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.tnpesu.org/ - என்ற இணையதள முகவரியில் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.06.2024
முகவரி:
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்
Melakottaiyur, Chennai, Tamil Nadu 600127
பொறியியல் படிப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் வளாகக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. ஒற்றைச் சாளர முறையில் நடந்து வரும் இந்த கலந்தாய்வு (TNEA Admission) மூலம் இடங்கள் நிரப்பப்படுகின்றன. ஜூன் 6ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
மருத்துவம் டூ ஐடிஐ: எந்தெந்த படிப்புகளுக்கு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு வழிகாட்டி இதோ!
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க.. -நுழைவுத் தேர்வு ஏதுமில்லை: வேளாண், மீன்வளப் படிப்புகளுக்கு ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?