கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் பத்து வளாகங்களில் பத்து கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 12 இளம் அறிவியல் பட்ட படிப்புகள் வழங்கபடுகின்றன. இந்த படிப்புகள் தொழில்நுட்பப் படிப்புகள் என்பதால் மொத்தம் நான்கு கால ஆண்டுகள் (8 செமஸ்டர்கள்) உள்ளன.
எவ்வளவு இடங்கள்?
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகளில் 14 பட்டப் படிப்புகளுக்கும் சேர்த்து 2,555 காலி இடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,806 காலியிடங்களும் உள்ளன.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு 240 இடங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 6 பட்டப் படிப்புகள், 3 தொழில்கல்வி பட்டப்படிப்புகளில் மொத்தம் 345 இடங்களும், 57 சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
பொதுவாக வேளாண்மைப் படிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாடத் திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் பாட திட்டம்
பி.எஸ்சி. (வேளாண்மை), பி.எஸ்சி. (தோட்டக்கலை), பி.எஸ்சி. (வனவியல்), பி.எஸ்சி. (மனையியல்), பி.டெக். (வேளாண் பொறியியல்), பி.எஸ்சி. (பட்டுப் புழு வளர்ப்பியல்) ஆகிய படிப்புகள் இதில் உள்ளன.
தொழில்நுட்ப பாட திட்டம்
இதன்கீழ் பி.டெக். (உயிர் தொழில்நுட்பவியல்), பி.டெக். (தோட்டக் கலை), பி.டெக். (உணவு பதப்படுத்தும் பொறியியல்), பி.டெக். (எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்), பி.டெக். (உயிரி தகவலியல்), பி.எஸ். (வேளாண் தொழில்சார் மேலாண்மை), பி.டெக். (வேளாண் தொழில்நுட்ப தகவல்கள்) ஆகிய படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இவை அனைத்தும் சுயநிதிப் படிப்புகள் ஆகும்.
12ஆம் வகுப்பில் மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்களை 2ஆல் வகுத்து, அனைத்து மதிப்பெண்களையும் கூட்டி, கட் –ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. பயோ மேத்ஸ் மாணவர்களும் கணினி அறிவியல் மாணவர்களும் ப்யூர் சைன்ஸ் மாணவர்களுக்கும் வேளாண் படிப்புகளைப் படிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
இந்த நிலையில் வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல ஜெயலலிதா மருத்துவர் பல்கலைக்கழகத்தில் மீன்வளப் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஜூன் 6 கடைசித் தேதி ஆகும்.
முக்கிய இணைப்புகள்
தேர்வர்கள் https://ucanapply.s3.ap-southeast-1.amazonaws.com/TNAU_UG_Brochure_2024_2025_revised.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிப்பது குறித்து அறிந்துகொள்ளலாம்.
வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்த சந்தேகங்களுக்கு, https://drive.google.com/file/d/1NOtW6BjokfWKUMwgcEdu_W4CbqIw_cnf/view என்ற கேள்வி பதில் பகுதியைக் காணலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://tnagfi.ucanapply.com/ என்ற இணைப்பை க்ளிக் செய்து மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnau.ac.in/