தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இயக்குனரகம் வெளியிட்டது. 2021-ம் ஆண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும்,  அதற்கு முந்தைய ஆண்டில் தேர்ச்சி பெற்றோர் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 2021-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறு | தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்க. ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும். இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கும் முறை: tnsilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ள


கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பக்கட்டணம்: விண்ணப்பக்கட்டணத்தொகையான ரூ.50/- விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / netBanking/ G-pay வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 28.07.2021


மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டிய மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு tnsilltraining.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வ ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணி தொடர்பு கொள்ளலாம்.


மின்னஞ்சல் முகவரி: onlineitiadmission@gmail.com ;  அலைபேசி எண் மற்றும்:Whatsapp எண் - 9499055612, 9499055618


இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   




இதற்கிடையே, அம்பத்தூர் அரசு ஐடிஐ-யில் சேர பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”அம்பத்தூர் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கம்மியர் கருவிகள், கோபா. செயலகப் பயிற்சி, கட்டிடப் பட வரைவாளர் தையல் தொழில்நுட்பம் ஆகிய தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு சேர்க்கைக்கு ஆன்லைனில் (www.skiltraining. tn.gov.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தையல் தொழில்நுட்பப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், இதர பயிற்சிகளில் சேர 10-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. சேர்க்கை ஜூலை 1 முதல் நடைபெற்று வருகிறது. பயிற்சியில் சேர்பவர்களுக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித் தொகை வழங்கப்படும். அதோடு இலவச பஸ் பாஸ், சைக்கிள், லேப்டாப், வரைபடக் கருவிகள், இரு செட் சீருடை அளிக்கப்படும்" என்று  தெரிவிக்கப்பட்டது. 


மேலும் வாசிக்க:


Government Job Examination: ’இனி ஒரே நாடு ஒரே தேர்வு!’ - மத்திய அரசு அறிவிப்பு! 


வேலைவாய்ப்புக்கு உகந்த புதிய பாடத்திட்டம்: முதல்வர் தலைமையில் ஆய்வு