நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் பெரும்பாலும் நிறைவடைந்ததால் எந்த இடையூறும் ஏற்படவில்லை, மீதம் இருந்த ஒரு தேர்வு மட்டும் முறையான பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.
ஆனால், ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட 8 ஆம் வகுப்பு நடத்தப்படாததால் தனித்தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தனர். இந்தநிலையில், மே 4 ல் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகள் முடிந்த பின், 8 ஆம் வகுப்பு தனித்தேர்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. TNPSC Group 2, 4 Exam Date: பிப்ரவரியில் குரூப் 2... மார்ச்சில் குரூப் 4 தேர்வு... டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!
தொடர்ந்து, கடந்த நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவிருந்தது. தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டது.அதில், தனித் தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், வருகிற டிசம்பர் 14 முதல் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கான நுழைவுச் சீட்டை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Petrol, Diesel Price: 34 வது நாளாக ஒரே விலை.. இன்றும் மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch Video: ஆஷஸ் டெஸ்ட் தொடங்கியதும் சாதனை... 85 ஆண்டுகளுக்குப் பின் முதல் பந்தில் விக்கெட்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்