கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணைகள் இன்று வெளியிடப்பட்டது.
பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும் என்று அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. தேர்வு தேதி வெளியான பிறகு காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான காலி பணியிடங்கள் | 5831 |
குரூப் 4 தேர்வில் பழைய காலி பணியிடங்கள்
புதிய காலி பணியிடங்கள் |
5255
3000 |
மேலும், வரும் ஆண்டில் 32 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. அந்தத் தேர்வுகளுக்கான அறிவிப்பு அந்தந்த மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்