உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், 2021-22ம் ஆண்டிற்கான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. 


இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அதனை அடுத்து, ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரை மிட்சல் ஸ்டார்க் வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே க்ளீன் பவுல்டாகி டக்-அவுட்டாகி வெளியேறினார் பர்ன்ஸ். 


 முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட்:






140 ஆண்டுகால ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரலாற்றில், 85 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய முதல் இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட் விழுந்திருக்கிறது. இதனால், வரலாற்று பக்கங்களில் ஸ்டார்க் இடம் பிடித்திருக்கிறார். முன்னதாக, 1936-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் எர்னி மெக்கார்மிக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில், ஸ்டான் வர்த்திங்டன், பெர்ட் ஓல்ட் ஃபீல்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.


மேலும் படிக்க: Ashes Series Record: 140 ஆண்டுகால ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் முறியடிக்கப்படாத சாதனைகள் என்னென்ன தெரியுமா...?


அந்த ரெக்கார்டு இப்போது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிப்பீட் ஆகியிருக்கிறது. ஆஷஸ் என்றாலே இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வெறிதான். இந்நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு பிறகு தொடங்கிய 2021 ஆஷஸ் தொடரின் ஆரம்பம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் வெறி ஏற்றிருக்கிறது.



மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண