Watch Video: லாரி டயரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், வலி தாங்க முடியாமல் இருவர் கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட இருவர்:
உத்தரபிரதேசத்தின் ஆக்ரா நெடுஞ்சாலையில் ஓடும் டிரக்கின் அடியில் இரண்டு பேர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் வலி தாங்க முடியாமலும், உயிர் பயத்திலும் சாலையில் நோக்கி சென்றவர்களை நோக்கி உதவி கேட்டு கூச்சலிட்டார். இந்த பயங்கர சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், “ஜாகிர் என அடையாளம் காணப்பட்ட நபர் உட்பட இரண்டு பேர் மோட்டார் சைக்கிளுடன் டிரக்கின் அடியில் சிக்கிக்கொண்டனர். ஜாகிர், வாகனத்தின் அடியில் இருந்து தலையை டயருக்கு அடியில் சிக்காதபட் வெளியே நீட்டித்துக் கொண்டு, உதவுங்கள் உதவுங்கள் என கூக்குரலிட்டுள்ளார். ஆனாலும், அந்த லாரி நிற்காமல் வேகமாக இருவரையும் இழுத்துச் செல்லும்” வீடியோ காண்போரின் நெஞ்சை உறைய செய்துள்ளது.
நடந்தது என்ன?
மருத்துவமனையில் காயங்களுடன் படுக்கையில் இருந்து ஜாகிர், தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்தார். அதன்படி, நாங்கள் நாங்கள் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு லாரியைக் கடந்தவுடன், அது திடீரென வேகம் அதிகரித்து எங்கள் மீது மோதியது. இதில் எங்கள் பைக் லாரியின் அடியில் சிக்கியது, மேலும் எங்கள் காலும் மாட்டிக் கொண்டது. நாங்கள் நிறைய கத்தினோம், ஆனால் லாரி ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தவே இல்லை, எங்களை இழுத்துச் சென்றார். பின்னர் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், லாரியை மறித்து, வலுக்கட்டாயமாக நிறுத்தி எங்களை காப்பாற்றினர்.” என ஜாகிர் தெரிவித்தார். தொடர்ந்து,0 பொதுமக்கள் இணைந்து டிரக்கைத் தள்ளி, அதன் அடியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றினர்.
டிரக் டிரைவர் கைது:
மற்றொரு வீடியோவில், ஒரு குழு டிரக் டிரைவரைத் தாக்குவதைக் காண முடிந்தது . சிலர் அவரை உதைத்தனர், மற்றவர்கள் அவரை அடிக்க செருப்புகளைப் பயன்படுத்தினர். இருவரை கொல்லும் முனைப்புடன் செயல்பட்டதாக டிரக் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.