அரசு மேல்நிலைப் பள்ளி, எலப்பாக்கம்

 

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எலப்பாக்கம் கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 97 மாணவ, மாணவிகளின் 96 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று அசத்தியிருந்தனர். 26 ஆண்டுகளாக பெண்கள் பள்ளியில் பணியாற்றி வந்த விஜயகுமாரி என்பவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதிலிருந்து, தனது சொந்த செலவில் சிறப்பு வினாத்தாள்கள் தயார் செய்து கொடுத்து, முக்கிய கேள்விகள் உள்ளிட்டத்திற்கு பலமுறை தேர்வு வைத்துள்ளார். கடந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி கொடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் முயற்சி செலுத்தும், ஒரு சதவீத தேர்ச்சி குறைந்து இருந்தது.

 

கிராமப்புற பள்ளி

 

இருந்தும் தலைமை ஆசிரியை விஜயகுமாரி ஆசிரியர்களை ஒருங்கிணைந்து இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சியை கொடுக்க வேண்டும் என கல்வி ஆண்டு துவக்கத்திலிருந்து, மாணவ மாணவர்களை அதற்காக தயார் படுத்தி வந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 102 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் முதல் மதிப்பெண் 556 பெற்ற மாணவி கெமிஸ்ட்ரி பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மிகவும் கிராமப்புற பள்ளி என்பதால் 8 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து கூட இந்த பள்ளிக்கு மாணவ மாணவிகள் சைக்கிள் அல்லது நடந்தே வந்து பள்ளிக்கு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

 

இக்கிராமத்திற்கு சரியான போக்குவரத்து வசதி கூட இல்லாத நிலையில் கடந்த ஆண்டு 99 சதவீத தேர்ச்சி மற்றும் இந்த ஆண்டு 100% தேர்ச்சியை அளித்த இந்த பள்ளிக்கு பெற்றோர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தேர்ச்சி குறித்து தலைமை ஆசிரியை விஜயகுமாரி கூறுகையில், கிராமப்புற பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஞானத்தை அளிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாகவே விருப்பப்பட்டு கிராமப்புற பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்தேன் ' , தொடர்ந்து மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என தெரிவித்தார்.

 

 



செங்கல்பட்டு ( +2 Result)

 


Chengalpattu Pass Percentage, TN 12th Result 2023: செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 283. இவற்றில் அரசு, நகராட்சி மற்றும் ஆதி திராவிடர் நலத் துறைப் பள்ளிகளின் எண்ணிக்கை 82. அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 30. மெட்ரிகுலேசன் மற்றும் சுய நிதி பள்ளிகளின் எண்ணிக்கை 171.


 

மாவட்ட தேர்ச்சி விவரம்

 

பொதுத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 31,916. அதில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 29,528 பேர் மற்றும் தேர்ச்சி சதவீதம் 92.52%

 

இப்பொதுத் தேர்வில் மாணவர்கள் 15,149 மாணவிகள் 16,767 தேர்வு எழுதினர். இதில் 13466 மாணவர்கள், 16062 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 78.26 % மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.71%

 

பள்ளிகள் வாரியாக (அரசுப் பள்ளிகள்)

 

அரசு, நகராட்சி மற்றும் நலத்துறைப் பள்ளிகளைச் சார்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 12,841. இதில் 10,942 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.6%

 

தேர்வு எழுதிய மாணவர்கள் 5975 தேர்ச்சி பெற்றவர்கள் 4656 தேர்வு சதவீதம் 82.44%, தேர்வு எழுதிய மாணவிகள் 6866 தேர்ச்சி பெற்றவர்கள் 6286 தேர்வு சதவீதம் 90.73%