பல்வேறு துறைகளில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பபிதற்கான அறிவிப்பை  ஸ்டேட் பேங் ஆப் இந்தியா அறிவித்துது. 


இதற்கான விண்ணப்பங்களை http://recruitment.bank.sbi இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். 2021, ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, சுயவிவரம் (Resume), கல்வி சான்றிதழ்,வயது சரிபார்ப்பு ஆவணங்கள், பணி அனுபவ சான்றிதல்கள் உள்ளிட்ட அத்தாட்சி ஆவணங்களை பதவிவேற்றம் செய்யவேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். 


 மேலும், தகவல்களுக்கு https://bank.sbi/careers (அல்லது)  https://www.sbi.co.in/careers  ஆகிய இணைய தளங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெறலாம். 


வயது வரம்பு : பணிகளுக்கு  ஏற்ப வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, வேளாண் துறையில் இணை மேலாளர் பணிக்கு      விண்ணப்பதார்கள்  01.07.2021 அன்றைய தேதியில் 25 வயதுக்கு குறையாமலும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த வயது வரம்பு இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தளர்த்தப்படும். அதேபோன்று, சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் துறையில்  துணை மேலாளர் பணிக்கு 01.04.2021 அன்றைய தேதியில்  35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    


தேர்ந்தெடுக்கும் முறை:  அத்தாட்சி ஆவணங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்கள், நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.  நேர்காணலின் போது, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கத் தவறியவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவர். சில பணிகளுக்கு மட்டும் கூடுதலாக எழுத்துத் தேர்வும் உள்ளது.               


விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.             


மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் www.sbi.co.in/careers என்ற Portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.    


மேலும், வாசிக்க: 



SSC Tier-I Exam: தென் மண்டல எஸ்.எஸ்.சி தேர்வு டையர் 1-க்கான தேதிகள் அறிவிப்பு - விவரம் உள்ளே