ஜூனியர் அசோசியேட் பணிக்கு விண்ணப்பபிதற்கான கடைசித் தேதி 2021 மே 20 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக  ஸ்டேட் பேங் ஆப் இந்தியா அறிவித்துது. 


மேலும், பொதுப் பிரிவைச் சேர்ந்த பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான சான்றிதழ்களை சமர்பிப்பதற்கான வழிமுறைகளையும்  ஸ்டேட் பேங்  வெளியிட்டுள்ளது. 


குறைந்தபட்ச கல்வித் தகுதி : 10 + 2  தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழக பாடப்பிரிவில் தேர்ச்சி.


இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் 27.04.2021 முதல் பெறப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி தேதி : 20 மே 2021 ஆகும். முன்னதாக, கடைசி தேதி மே 17 ஆக இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 


காலியிடங்கள் : 



 



வயது வரம்பு :


விண்ணப்பதார்கள்  01.04.2021 அன்றைய தேதியில் 20 வயதுக்கு குறையாமலும், 28 வயதுக்கு  மிகாமலும் இருக்க வேண்டும்.  இந்த வயது வரம்பு இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தளர்த்தப்படும். 



 


தேர்வுகள்: முதல்நிலை தேர்வை நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, முதன்மை தேர்வு 31.07.2021 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750 செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.             


மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் www.sbi.co.in/careers என்ற Portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.    


மேலும் வாசிக்க: 


Indian Post Job: சென்னை அஞ்சல் துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு; மே 26 வரை விண்ணப்பிக்கலாம்! 


BEL Recruitment 2021:பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 


UPSC Prelims Postponed | யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் ஒத்திவைப்பு..