பாலஸ்தீனிய மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் தாக்குதல் புதிய அபாய கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று, காசா நகரில், அல் ஜசிரா, பிபிசி, ஏ.எஃப்.பி உள்ளிட்ட பன்னாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த வந்த ஜலா டவர் கட்டடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஊடக நிறுவனங்களைத் தாண்டி கட்டிட்டத்தில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களும் இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்.
முன்னதாக என்ற அந்தக் கட்டிட உரிமையாளர் ஜாவத் மெஹ்தியை இஸ்ரேல் அரசு தொலைபேசியில் தொடர்புகொண்டு, கட்டிடம் இடிப்பு செய்தியை அறிவித்து. ஒரு மணி நேரத்தில், கட்டிடத்தில் இருந்து அனைவரும் காலி செய்துகொள்ளும்படியும் எச்சரித்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்கதல் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட அல் ஜசிரா, " இந்த படுபாதக செயலுக்கு எதிராக அனைத்து ஊடக நிறுவனங்களும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் ஒன்று கூட வேண்டும். இந்த செயலுக்கு இஸ்ரேல் அரசு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். அதற்கான, அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அல் ஜசிரா நிறுவனம் உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்தது.
கலவரம்:
சர்வதேச சமுதாயங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாக கருதப்படும் கிழக்கு ஜெருசலம் பகுதியில் உள்ள ஷேக் ஜர்ராவி நிலப்பரப்பில் நான்கு பாலஸ்தீனிய குடும்பங்களை வெளியேற்றப்படுவது தொடர்பாக இஸ்ரேலிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, மே 6ம் தேதி ஜெருசலமில் பாலஸ்தீனியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரிய வன்முறை மோதல்களாக உருவெடுத்தன. பாலஸ்தீன சுணி இஸ்லாமிய போராளி இயக்கமும் அரசியல் கட்சியுமுமான ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேல் வான்வளித் தாக்குதலைத் தொடர்ந்தது.
இதுநாள் வரையில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குலில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பதில் தாக்குதலில் 20க்கும் மேறபட்ட இஸ்ரேல் நாட்டினர் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஜெருசலம்:
யூதம், கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய மதங்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்து, சிறப்புடைய பழம்பெரும் நகராகிய ஜெருசலம் எந்த நாட்டின் அல்லது ஆளுகையின் கீழ் வரவேண்டும் என்பது குறித்து, பன்னாட்டளவில் சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றனர்.
முன்னதாக, இஸ்ரேல் அரசு ஜெருசலம் நகரைத் தனது தலைநகராக அறிவித்தது சட்டபூர்வமாகச் செல்லாது என்று ஐ.நா. பொதுப்பேரவை தெரிவித்தது. "ஆக்கிரமிப்பு நாடாகிய இசுரயேல் எருசலேம் திருநகரின்மீது தனது சட்டங்கள், சட்ட உரிமை, நிர்வாகம் சார்ந்தவற்றைத் திணிப்பது சட்டப்படி செல்லாது. இத்தகைய சட்டமுரணான, தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துமாறு இஸ்ரேல் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என ஐ.நா. பொதுப்பேரவையின் 2009ஆம் ஆண்டு தீர்மானம் 63/30-இல் தெரிவிக்கப்படுகிறது.
மேலுள்ள இணைப்பில் இருக்கும் பாலஸ்தீன சிறுமி, முஸ்லீம்களாக இருப்பது பாவமா எனக் கண்ணீருடன் கேட்கும் கேள்வி, அந்த நிலத்தின் வேதனையை அறிவிப்பதாக உள்ளது.