BHEL Recruitment 2021 Notification: TRAINEE ENGINEER –I பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஒப்பந்தம் அடிப்படையில் மூன்று ஆண்டு கால பணி :


TRAINEE ENGINEER –I பணிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள்  ஓராண்டு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய  வேண்டும். இது, பணி செயல்திறன் அடிப்படியில் மூன்று ஆண்டாக நீட்டிக்கப்படலாம்.     



  


குறைந்தபட்ச கல்வித் தகுதி : எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகங்களில் பி.இ / பி.டெக் படிப்புகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 


இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் 12.05.2021 (இன்று ) முதல் பெறப்படுகின்றன. ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி தேதி : 21 மே 2021 ஆகும்.


வயது வரம்பு :


விண்ணப்பதார்கள்  01.04.2021 அன்றைய தேதியில், 25 வயதுக்கு  மிகாமலும் இருக்க வேண்டும். அமலில் இருக்கும் அரசுக் கொள்கைகளுக்கு ஏற்ப எஸ்.சி. / எஸ்.டி. / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு அளிக்கப்படும். 


 


தேர்வு முறை:




மூன்று வித மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பி.இ, பி.டெக் பாடப்பிரிவில் பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்களுக்கு 75% மதிப்பு கொடுக்கப்படுகிறது. கல்லூரிப் படிப்புக்கு பிந்தைய பணி அனுபவத்திற்கு 10% மதிப்பும், நேர்காணலுக்கு 15% மதிப்பும் அளிக்கப்படுகிறது. 


BEL Recruitment 2021 Notification


கல்லூரிப் படிப்புக்கு பிந்தைய பணி அனுபவம் கொண்ட மாணவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 




 



விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 செலுத்த வேண்டும். இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.             


மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் www.bel-india.in/careers என்ற Portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். குறைந்த இடங்களே என்றாலும் நல்ல ஊதியம் கிடைக்கும் என்பதால் இப்பணிக்கு கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க:


  UPSC Prelims Postponed | யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுகள் ஒத்திவைப்பு.. 


SBI Clerk 2021 Recruitment: SBI வங்கியில் ஜூனியர் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 


Fact Check - UGC Fake News Clarification : கல்லூரி தேர்வு அட்டவணை வெளியீடா? யுஜிசி விளக்கம்..