அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். 


அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


பொதுத்தேர்வு தேதி


’’மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. அதேபோல மார்ச் 14ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. முழுமையாக வாசிக்க:  TN Board Exam 2023: 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எப்போது?- 2023 தேர்வு தேதிகளை அறிவித்த அரசு!


கொரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல், வழக்கமான கல்வி ஆண்டாக இந்த ஆண்டு செயல்படும். 210 வேலை நாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளன. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். 


பள்ளிகள் திறப்பு


1-10 வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்.’’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். முழுமையாக வாசிக்க: TN School Re-open: பள்ளிகள் திறப்பு எப்போது? தேதி வாரியாக விவரங்களை வெளியிட்ட அமைச்சர்!


சனிக்கிழமைகளில் விடுமுறை


மேலும் பேசிய அவர், ’’2022 - 23ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி, சனிக்கிழமை பள்ளிகள் கிடையாது. தேவைப்பட்டால், அதாவது பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய தேவை இருந்தால் சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்படும்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


அதேபோல, ''கட்டணம் வசூலிப்பதில், தனியார் பள்ளிகள் கறார் காட்டக்கூடாது; உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண