தமிழ்நாட்டில் 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார். 


அதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:


’’மார்ச் 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளது. அதேபோல மார்ச் 14ஆம் தேதி 11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல ஏப்ரல் 3ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.


கொரோனா கால அட்டவணையைப் போல அல்லாமல், வழக்கமான கல்வி ஆண்டாக இந்த ஆண்டு செயல்படும். 210 வேலை நாட்களுடன் பள்ளிகள் செயல்பட உள்ளன. காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும். 




பள்ளிகள் திறப்பு


1-10 வகுப்புகளுக்கு ஜூன் 13ஆம் தேதியும், பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். தனியார் பள்ளிகளும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். முழுமையாக வாசிக்க: TN School Re-open: பள்ளிகள் திறப்பு எப்போது? தேதி வாரியாக விவரங்களை வெளியிட்ட அமைச்சர்!


நிதித்துறை அமைச்சரிடம் பேசி இருக்கிறோம். தமிழகத்தின் நிதி நிலைமை சீராகும்போது பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். 


கருணை மதிப்பெண்கள்


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்விகளில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருப்பின், கருணை மதிப்பெண்கள் (Grace Marks) வழங்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும்’’.


இவ்வாறு  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


முன்னதாகக் கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனதை அடுத்து, 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், தாமதமாக மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், 2022- 23ஆம் கல்வி ஆண்டு வழக்கமான கல்வி ஆண்டாக இருக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


*


மேலும் வாசிக்கலாம்: Saturday Leave: இனி லீவுதான்! எல்லா சனிக்கிழமைகளிலும் பள்ளிக்கு விடுமுறை- அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண