யு.ஜி.சி. நெட்  தேர்வின் (University Grants commission- National Eligibility Test -(ugc net)) நான்காவது நிலை தேர்வுக்கான விடைக்குறியீடு வெளியிடப்பட்டுள்ளது.  ஒரேகட்டமாக நடத்தப்பட்ட டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 (December 2021 and June 2022 (Merged Cycles)) தேர்வுகளுக்கான விடைகுறியீட்டு வெளியாகியுள்ளது.


அக்டோபர் 8, 10, 11, 12, 13 மற்றும் 14, ஆகிய தேதிகளில் தேர்வு எழுதியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விடைக்குறியீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை (National Testing Agency) அறிவித்துள்ளது.


இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 


2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கான யுஜிசி நெட் தேர்வு மே மாதம் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கரோனா பரவலால் கடந்த 2020 டிசம்பர், 2021 ஜூன் மாதங்களில் நெட் தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து, 2 வாய்ப்பையும் சேர்த்து ஒரேகட்டமாக நெட் தேர்வை நடத்த தேசியத் தேர்வுகள் முகமை முடிவு செய்தது.


இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றது. அதையடுத்து நெட் தேர்வுகள் நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டன. நாடு முழுவதும் 239 நகரங்களில் 837 தேர்வு மையங்களில் இம்மாதம் 8 முதல் 14 ஆம் தேதி வரை நெட் தேர்வு நடைபெற்றது. 


எப்படி பதிவிறக்கம் செய்வது:


யு.ஜி.சி.- இன் அதிகாரபூர்வ வலைதளமான ugcnet.nta.nic.in


என்பதை கிளிக் செய்து  உங்களுடைய பதிவு எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு விடைக்குறியீட்டை (Answer Key) பதிவிறக்கம் செய்யலாம்.


UGC NET answer key 2022:


முதலில் ugcnet.nta.nic.inஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.


‘Candidate Activity’ என்ற பிரிவில் விடைக்குறியீட்டிற்கான (answer key) லிங்க் இருக்கும்.


அதை கிளிக் செய்யவும்.


அந்தப் பக்கத்தில் உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி பதிவி செய்தால் அவ்வளவுதான்.


விடைக்குறிப்புகள் டவுன்லோட் செய்யும் ஆப்சன் வரும்.


விடைக்குறியீட்டிற்கான லிங்கி இதோ- https://examinationservices.nic.in/examsys22/root/AuthForAdmitCardDwd.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFV/yIzhTZHBze3wooSg9DjjeP2SFcV+P+R9kUHvj3PGK




மேலும் வாசிக்க..


TNPSC Exam Results: இன்னும் சில நாட்களில் குரூப் 2 , 2ஏ தேர்வு முடிவுகள்..! டி.என்.பி.எஸ்.சி அளித்த தகவல்..


UGC On Women's Safety: கல்லூரிகளில் மாணவிகள் பாதுகாப்பு; கருத்து கேட்டு புதிய விதிகளை உருவாக்கும் யுஜிசி!


துணைவேந்தர் நியமனத்தில் பணமா?- ஆளுநரே முழுப்பொறுப்பு: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலடி