இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்படுமென கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 12ஆம் தேதி தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இதனையடுத்து தேர்வு முடிவுக்காக மாணவ, மாணவிகள் காத்திருந்தனர்.


ஆனால், மும்பை மாணவர்கள் இரண்டு பேர் தொடுத்த வழக்கால் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 


மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் லட்சக்கணக்கானோர் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் சூழலில் இரண்டு மாணவர்களுக்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது சரியல்ல’ என கூறி நீட் தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதியளித்து உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் (அக்டோபர் 1) நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தமிழ்நாடு அளவில் நாமக்கல்லை சேர்ந்த மாணவர் எம். பிரவீனும், மாணவி எஸ்.ஏ. கீதாஞ்சலியும் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். சேலத்தை சேர்ந்த அர்ஜிதா என்ற மாணவி 705 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் கீதாஞ்சலி 23ஆவது இடத்தையும், பிரவீன் 30ஆவது இடத்தையும், அர்ஜிதா 60ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


இந்நிலையில், நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் எத்தனை பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.


அதன்படி, தமிழ்நாட்டில் 1,08,318 பேரில் மொத்தம் 58,922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் மாநில பாடத்திட்டத்தில் பயின்று தேர்வு எழுதிய 88,933 பேரில் 42,202 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். முதல் 10,000 இடங்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: NEET UG Result 2021: நீட் தேர்வு முடிவுகள் - தமிழ்நாடு அளவில் நாமக்கல் மாணவர்கள் முதலிடம்!


NEET UG Result Declared: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின... செப்.12ல் தேர்வு நடந்தது!


NEET: நீட் தேர்வு ரத்து: ஆதரவு கேட்டு 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!