1. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே இளைஞர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

2. வடகிழக்கு பருவ மழை, பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 104 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 31 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.



 

3. காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில், இல்லம் தேடி கல்வி கற்பிக்கும் பயிற்சி வகுப்பு, திட்ட உறுப்பினர்களுக்கு நடைபெற்றது.கற்றல் இடைவெளியை குறைக்க, தமிழக அரசு, இல்லம் தேடி கல்வி எனும் புதிய திட்டத்தை துவக்கியுள்ளது.முன்னோட்ட அடிப்படையில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

4. திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ( ஆரஞ்சு எச்சரிக்கை) புதன்கிழமை (நவ.3) பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

 

5. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.



 

6. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் உடல் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

 

7. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் சரிந்து விழுந்ததில், முத்தியால்பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

8. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றவர்களால், சென்னையின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது



 

9. சென்னை மாவட்ட வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 1,335 பேருக்கு ரூ. 1.60 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

 

10. தீபாவளிக்கு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களில், இரண்டு நாட்களில் 2.78 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.