தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-I தேர்விற்கான மாதிரி தேர்வுகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TRB உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் எழுத்துத் தேர்வு 13.07.2024. அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 11.06.2024 முதல் துவங்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேனி மாவட்ட விண்ணப்பதாரர்கள் பயன்பெறும் நோக்கில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளகத்தில் டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முழுமாதிரி தேர்வுகள் 24.06.2024, 27.06.2024, 02.07.2024 மற்றும் 05.07.2024 ஆகிய தேதிகளில் சிறந்த வல்லுனர்கள் மூலம் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு டி.என்.பி.எஸ்.சி தரத்தில் நடத்தப்படவுள்ளது.
தேர்வர்கள் இத்தேர்வுக்கு வரும்போது டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இம்முழுமாதிரி தேர்வில் பங்குபெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 63792 68661, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து, பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.