✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?

செல்வகுமார்   |  21 Jun 2024 05:35 PM (IST)

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்து வெளிவருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், ஜாமீன் உத்தரவை செயல்படுத்தாமல் ரத்து செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் 

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஜாமீன் உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் (ED) மதுபான கொள்கை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து கடந்த மே மாதம், மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜூன் 01 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதை தொடர்ந்து ஜூன் 2ம் தேதி மீண்டும் சரணடைந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையானது, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் மற்றும் அமலாக்கத்துறையின் வாதங்களை நீதிமன்றம் கேட்டறிந்த நிலையில், நீதிமன்றம் விசாரித்து கெஜ்ரிவாலுக்கு சாதகமாக, இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது.

இந்த தருணத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்து  இன்று வெளிவர இருந்தார். ஆனால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், ஜாமீன் உத்தரவை செயல்படுத்தாமல், இன்று ரத்து செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்

விசாரணை நீதிமன்றம் நேற்று ஜாமீன் உத்தரவு வழங்கி இருந்தமைக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இவ்வழக்கின் மீதான விசாரணையானது, பல மணி நேரம் இன்று நடைபெற்ற நிலையில், தீர்ப்பை ஒத்திவைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையின் போது, ஜாமீன் அனுமதியை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தது உயர்நீதிமன்றம். 

இந்த சூழ்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என்று எதிர்பார்ப்புடன் ஆம் ஆத்மி தொண்டர்கள் இருந்த நிலையில், ஏமாற்றமடைந்தனர்.  

Published at: 21 Jun 2024 05:12 PM (IST)
Tags: Arvind Kejriwal Delhi HC breaking news Abp nadu Bail
  • முகப்பு
  • செய்திகள்
  • இந்தியா
  • கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவர சில நிமிடம்: திடீரென ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.