தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட 13 அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.  


அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு கூட்டம்


திங்கள்கிழமை அமைச்சர் பொன்முடி வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை தரப்பில் சோதனை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை தரப்பில் பொன்முடியிடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்த அடுத்த நாள் அதாவது ஜூலை 19 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அமலாக்கத்துறை சோதனை மற்றும் அவர்கள் மேற்கொண்ட விசாரணை குறித்து விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. 


இதற்கிடையே தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில்  நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 2022-23 மற்றும் 23-24 கல்வியாண்டுகளில் மாணவர் சேர்க்கை, கலைஞர் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், மாணவர்கள் ஆர்வம் காட்டும் படிப்புகளில் பாடத்திட்டத்தை மேம்படுத்துவது, பல்கலைக்கழகங்களில் பொதுவான பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாகக் கூறப்படுகிறது. 


நேற்றைய தினம், ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து, தனியார் பல்கலைக்கழகத்  துணை வேந்தர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. நேற்று இந்த ஆலோசனை நடைபெற்ற நிலையில், இன்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, 13 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 


Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!


Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!


CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்