மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 157 மாணவர்களுக்கு 7 கோடியே 71 இலட்சத்து 21 ஆயிரத்து 550 ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.


தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்களிடம் படிப்பில் திறமையும் ஆர்வமும் இருந்தும், அவர்களின் குடும்ப ஏழ்மை சூழ்நிலை மற்றும் வசதியில்லாததால் படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் வசதியற்ற ஏழை எளிய மாணவர்கள் படிக்க வழிவகை செய்யும் வகையில் வங்கிகளில் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் கல்விக்கடனை மாணவர்கள் கல்வி பயில உதவும் வகையில் கல்விக்கடன் பெற அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


மாவட்ட ஆட்சியர் பேச்சு 


அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழக அரசின் உத்தரவின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் அணைத்துக் வங்கிகளின் சார்பில், கல்விக்கடன் முகாம் தற்போது நடைபெறுகிறது.


மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 13 வது இடம்- எதில் தெரியுமா.‌..?




அதிகரிக்கப்பட்ட கல்விக்கடன் 


இதே போன்று சென்ற ஆண்டு (2023-24) மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 1037 மாணவ மாணவியர்க்கு, மொத்தம் 16.69 கோடி ரூபாய்க்கான உயர்கல்வி கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு (2024-25) நம்முடைய மயிலாடுதுறை மாவட்டத்தில் 1500 மாணவ, மாணவியர்க்கு கல்வி கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய முகாமிலும் சுமார் 157 மாணவ மாணவியர்க்கு மொத்தம் 7.71 கோடி ரூபாய் மதிப்பில், உயர்கல்வி கடன் வழங்கப்படுகிறது. 


TNPSC Group 2 Marks 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு; ஏன்? காண்பது எப்படி?




பல்வேறு பிரிவு மாணவர்களுக்கு கல்விக்கடன் உதவி


இன்றைய தினம், பொறியியல் படிப்பில் 85 மாணவர்களும், மருத்துவ படிப்பில் 15 மாணவர்களும், கலை அறிவியல் கல்லூரி படிப்பில் 30 மாணவர்களும், செவிலியர் படிப்பில் 18 மாணவர்களும், இதர படிப்புகளில் 9 மாணவர்களும் ஆக மொத்தம் 157 மாணவர்கள் கல்வி கடனுதவி பெற்றுள்ளனர். அரசின் நோக்கமானது, எந்த சூழ்நிலையிலும் மாணவ, மாணவியர் உயர்கல்வி தொடராமல் விட்டுவிடக்கூடாது என்பதே, எனவே தான், மாவட்ட அளவில் இம்மாதிரியான கல்விக்கடன் முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. 


SIP vs SWP: முதலீட்டில் எஸ்ஐபி தெரியும்..! அதென்ன எஸ்டபள்யுபி? கணக்கு தொடங்குவது எப்படி, செயல்முறை என்ன?




எதிர்கால நல்வாழ்வை எண்ணத்தில் கொண்டு ஒவ்வொரு மாணவ, மாணவியரும் உயர்கல்வி பயின்று உயரத்தை அடைய வேண்டும். அதற்கான வாய்ப்பு தான் இந்த முகாம். இதை பற்றி மேலும் அறிய, இங்கு சில வங்கிகளின் கல்விக்கடன் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நீங்கள் அனைவரும் சரியான வழிகாட்டுதல் பெற்று பயனுற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார்.


Ruturaj Gaikwad: முதல் பந்து பவுண்டரி..இரண்டாவது பந்தில் காத்திருந்த அதிர்ச்சி!ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு என்னாச்சு?


இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ச.லியோ ஃபாண்டின் நாதன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி அதிகாரி லஷ்மிபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழனிவேல் உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.