மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக தொடங்கி வைத்தார்கள்.


மாவட்ட ஆட்சியர் பேச்சு 


அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியதாவது; தமிழக அரசானது விளையாட்டுத்துறையில் தனி கவனம் மேற்கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு வலிமையைக் கொடுக்கும். பள்ளி அளவிலும், கல்லூரி அளவிலும் நடைபெறும் போட்டிகளில் மாணவர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.




5 பிரிவுகளில் 57 வகையான விளையாட்டு போட்டிகள்


2024-25 ஆம் ஆண்ழற்கான முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான 57 வகையான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் சிறப்பான முறையில் தொடங்கப்பட்டுள்ளது. அதே போன்று நமது மாவட்டத்திலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


Lionel Messi Dog Cost:அடேங்கப்பா..மெஸ்ஸியின் செல்லப்பிராணி இத்தனை லட்சமா?வெளியான முக்கிய தகவல்




மாநில அளவில் 13 வது இடம்


கடந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு 10,405 பதிவு எண்ணிக்கையை கொண்டு 27 வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிக அளவில் முதலமைச்சர் கோப்பை பதிவு எண்ணிக்கையை அதிகரித்து தமிழக அளவில் நமது மாவட்டம் 28,404 பதிவு எண்ணிக்கையை கொண்டு 13 வது இடத்தை பிடித்துள்ளது. அதே போல் கடந்த வருடம் மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 16 பதக்கங்கள் பெற்று, நமது மாவட்டம் தமிழக அளவில் 10 வது இடமும் டெல்டா மண்டல அளவில் முதலிடமும் பெற்றுள்ளது.


IND vs PAK: பாகிஸ்தானை பந்தாடிய கோலி! புது வரலாறு படைத்த இந்தியா! கடந்தாண்டு இதே நாள்!


 




பரிசு விபரம் 


மாவட்ட அளவில் தனி நபர் விளையாட்டு போட்டி மற்றும் குழு விளையாட்டு போட்டி - பரிசுத் தொகை முதலிடம் தலா 3000 ரூபாய் ,இரண்டாமிடம் தலா 2000 ரூபாய் மூன்றாமிடம் தலா 1000 ரூபாயும், மாநில அளவில் தனி நபர் விளையாட்டு போட்டி- பரிசுத் தொகை தலா 1,00,000 ரூபாய், இரண்டாமிடம் தலா 75,000 ரூபாய் மூன்றாமிடம் தலா 50,000 ரூபாய், மாநில அளவில் குழு விளையாட்டு போட்டி - பரிசுத் தொகை முதலிடம் தலா 75,000 ரூபாய் , இரண்டாமிடம் தலா 50,000 ரூபாய் , மூன்றாமிடம் தலா 25,000 ரூபாய் என பரிசுகள் வழங்கப்பட உள்ளது. முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 3 விழுக்காடு வேலை வாய்ப்பில் வாய்ப்பளிக்கப்படுகிறது என தெரிவித்தார்கள்.


Tilak Varma: தீவிர பயிற்சியில் திலக் வர்மா! அடுத்த என்ன நடக்கும்? அவரே சொன்ன பதில்


    


பங்கேற்பாளர்கள் விபரம் 


இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பாபு, நகர்மன்ற உறுப்பினர் கீதா செந்தில்முருகன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


ஆரணி தொகுதியை திமுக புறக்கணிப்பதாக கூறுவதா? தத்தெடுத்துள்ளேன் - அமைச்சர் எ.வ.வேலு