தேனி மாவட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TABCEDCO) மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன், கறவை மாட்டுக்கடன், சிறு,குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதி அமைக்க மானியத்துடன் கூடிய கடன், ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுகழகம் (TAMCO) மூலம், கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அயன் படத்துக்கே Tough கொடுத்த பயணி.. கடத்தப்பட்ட தங்கம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
அதன்படி டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன் பெறுவதற்கு லோன் மேளாக்கள் கீழ்தெரிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களில் 13.09.2024, 20.09.2024 மற்றும் 30.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது.
- மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அல்லிநகரம் கிளை, தேனி.
- ஏ145, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, பெரியகுளம்.
- டி.டி 109, ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்,
ஆண்டிபட்டி.
- மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, போடிநாயக்கனூர் கிளை, தேனி.
- எம்.டி.தனி 97 இராயப்பன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்,
உத்தமபாளையம்.
- எம்.பி. 101 சின்னமனூர் வெற்றிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கம்,
சின்னமனூர்,
- ஏ.425 காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், கம்பம்.
- ஏ.631 உத்தமபாளையம் நகர கூட்டுரவு வங்கி உத்தமபாளையம்.
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கடன் பெறுவதற்குசமர்பிக்கப்படவேண்டியஆவணங்கள்
- குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிசான்று, வருமானசான்று, தொழில்
குறித்த விவரம் / திட்ட அறிக்கை
- கடன் தொகை ரூ.25,000/- கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு
சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஒரு நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும்.
- கடன் தொகை ரூ.50,000/- கோரும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு
சங்கங்களில் உறுப்பினராக உள்ள இரு நபர் ஜாமீன் கையெழுத்திட வேண்டும்.
- கடன் தொகை ரூ.1,00,000/- மேல் கோரும் பட்சத்தில், கோரப்படும்
தொகைக்கு இரு மடங்கு சொத்து அடமான ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்
- சிறுபான்மையினருக்கான கல்வி கடன் பெறுவதற்கு பள்ளி மாற்று
சான்றிதழ் நகல், உண்மை சான்றிதழ் (Bonafide certificate) நகல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது /செலான் நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல்.
எனவே, தனிநபர் மற்றும் குழுக்கடன் பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினைச் சார்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் லோன் மேளாவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.