சென்னை பல்கலைக்கழகத்தில் ஜூன் 2ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னைப் பல்கலைக்கழகம்(Madras University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. 


எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. 


இந்த சூழலில் பிறகே தொழில்முறைப் படிப்புகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பல்கலைக்கழகங்கள் செயல்படத் தொடங்கின. இதைத்தொடர்ந்து கலை, இளங்கலை, முதுகலை, பிஎச்.டி. உள்ளிட்ட அறிவியல் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு வரும் அனைத்து வகை இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி தொடங்க இருந்தது. இந்நிலையில், தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி முதல் நடைபெறும்.


பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


*


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய கல்வி செய்திகளைஅறிய Abpnadu-இல் கல்வி செய்திகள் (Education news) என்ற பக்கத்தில் தொடரவும்.