தஞ்சாவூர்: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் (தன்னாட்சி) கலைக் கல்லூரியில் 2024 - 25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்ட பாடப்பிரிவுகளுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று முதல் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் தெரிவித்துள்ளதாவது: இணையவழியில் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களைப் பதிவு செய்து தாங்கள் விரும்புகின்ற கல்லூரி மற்றும் தாங்கள் விரும்புகின்ற பாடப்பிரிவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். 


தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலைக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளும் இடங்களும் பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.ஏ. தமிழ் (100), பி.ஏ. ஆங்கிலம் (80), பி.ஏ., வரலாறு தமிழ் வழி (60 ), பி.ஏ., வரலாறு ஆங்கில வழி (60), பி.ஏ., பொருளாதாரம் தமிழ் வழி ( 95), பி.ஏ.,பொருளாதாரம் ஆங்கில வழி (40 ), பி.காம்., ஆங்கில வழி ( 155),  பி.பி.ஏ.. ஆங்கில வழி (60), பி.எஸ்ஸி கணிதம் தமிழ் வழி (25 ), பி.எஸ்ஸி கணிதம் ஆங்கில வழி (98 ), பி.எஸ்ஸி இயற்பியல் தமிழ் வழி (60), பி.எஸ்ஸி இயற்பியல் ஆங்கில வழி ( 60 ) இடங்கள் உள்ளன.


இதேபோல்  பி.எஸ்ஸி வேதியியல் தமிழ் வழி (36), பி.எஸ்ஸி வேதியியல் ஆங்கில வழி (36 ),பி.எஸ்ஸி தாவரவியல் தமிழ் வழி ( 40), பி.எஸ்ஸி தாவரவியல் ஆங்கில வழி (40 ),பி.எஸ்ஸி விலங்கியல் தமிழ் வழி (40),பி.எஸ்ஸி விலங்கியல் ஆங்கில வழி (40), பி.எஸ்ஸி கணினி அறிவியல் ஆங்கில வழி (69), பி.எஸ்ஸி புள்ளியியல் ஆங்கில வழி (30),பி.எஸ்ஸி புவியியல் ஆங்கில வழி (20),புவியியல் தமிழ் வழி (20)ஆகிய பாடப்பிரிகளுக்கு மாணவிகள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


தொலைதூர மாணவிகளின் வசதிக்காகக் கல்லூரியில் முதன்மை விடுதி செயல்படுகிறது. மேலும் அரசு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட நலத்துறைகளால் நடத்தப்படுகின்ற நலத்துறை விடுதிகளும் கல்லூரி வளாகத்தில் செயல்படுகின்றன. விடுதிகளில் சேர விரும்புவோர் சேர்க்கை பெற்ற பின்பு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.


இணையதளத்தில் விண்ணப்பிக்க உதவி தேவைப்படும் மாணவர்கள் நலனுக்காக குந்தவை அரசு கல்லூரி உள்ளிட்ட அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் செயல்படும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.