தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பப் பதிவு இன்று காலை முதல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


பொறியியல் படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. மாணவர்கள் காலை முதல் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இன்று தொடங்கிய இந்த விண்ணப்ப பதிவு வரும் ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


Vanniyar Reservation in TN: கல்லூரி மாணவர் சேர்க்கையில் வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறை; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!


இதையடுத்து, பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்டு 25-ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4-ந் தேதியும் வெளியிடப்பட உள்ளது. பின்னர், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 7-ந் தேதி தொடங்க உள்ளது. செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கும் இந்த கலந்தாய்வு வரும் அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை துணைக்கலந்தாய்வு நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.




இந்தநிலையில்,  பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு முதல் நாளில் மாலை 5.30 மணி நேர நிலவரப்படி 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 10,084 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். 5,363 பேர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்துள்ளனர்.


முன்னதாக, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அவர்களது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 50 சதவீதம், 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 20 சதவீதம் மற்றம் 12-ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வு மற்றும் அகமதிப்பீடு தேர்வில் 30 சதவீதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு 100 சதவீதத்திற்கு என்று கணக்கிடப்பட்டள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மறுதேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்கள் மட்டுமின்றி அனைத்து பாடங்களுக்கும் மறுதேர்வு எழுத வேண்டும் என்றும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கும் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Ponmudi on College Fees: அதிக கட்டணம் வசூல்? தனியார் கல்லூரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!