ஏப்ரல் மாதத்துக்கான JEE முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் தொடர்பான தகவல்களை nta.ac.in, ntaresults.nic.in, jeemain.nta.nic.in ஆகிய இணைய தளங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெறலாம்.


மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில், பிப்ரவரி மாதம் தொடங்கி நான்கு முறைகள் (மார்ச், ஏப்ரல், மே) JEE தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது. மேலும், மொத்தம் கேட்கப்படும் 90  கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 30 கேள்விகள்) மாணவர்கள் ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தது. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம் என்றும், மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. 




இந்தாண்டு, பிப்ரவரி, மார்ச் மாத தேர்வுகள் நடைபெற்ற நிலையில், மே, ஏப்ரல் மாதத்துக்கான தேர்வுகள் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  மூன்றாம் கட்ட தேர்வுகள் ஜூலை 20 முதல் 27ம் தேதி வரை நடத்தப்பட்டது. மே மாதத்துக்கான நான்காம் கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2ம் தேதி வரையும் நடத்தப்படுகிறது. 


நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இத் தேர்வில் பங்கேற்று, அனைவருமே சமமான வாய்ப்பைப் பெறுவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு இந்தண்டு முதல் பல்வேறு மொழிகளில் நடத்தப்படுகிறது. 


 






ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான ஜே.இ.இ அட்வான்ஸ்ட் தேர்வு 2021 அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்வுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்றி நடத்தப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.        


மேலும், ஜேஇஇ (மெயின்) தேர்வின் அடிப்படையில், 2021- 22 கல்வி  ஆண்டில், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தொழில்நுட்பக் கழக நிறுவனங்கள், திட்டம் மற்றும் கட்டிடக்கலை நிறுவனங்கள், மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் சேரும் தகுதியைப் பெறுவதற்கு, 12-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் விதியை மத்திய கல்வி அமைச்சகம் தளர்த்தியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது.  


மேலும், வாசிக்க:


அக்டோபர் 3-ஆம் தேதி JEE அட்வான்ஸ்ட் தேர்வு: மத்திய அமைச்சர் அறிவிப்பு


மதிப்பெண் திருப்தி இல்லையா...சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு!