JEE Advanced 2022 Result: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளை ஐஐடி பாம்பே இன்று வெளியிட்டுள்ளது. முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். 


இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.


ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் ஜூலை 11ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து, ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்றது. முதல் நாள் காலி 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடந்தது. இந்தத் தேர்வை 1.56 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். 


தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு  கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் இன்று வெளியாகி உள்ளன. தேர்வு முடிவுகளை ஐஐடி பாம்பே வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் - https://result.jeeadv.ac.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


எப்படி?


* தேர்வர்கள் https://result.jeeadv.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 
* உள்ளே சென்றவுடன் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். 
* பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். 


ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றோர் கவனத்துக்கு


ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றோர், செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் Joint Seat Allocation (JoSAA) கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். 


ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்கள் மூலம் AAT எனப்படும் கட்டிடக்கலை திறன் தேர்வை (AAT 2022) எழுத விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. நாளை (செப்.12) வரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டிடக்கலை திறன் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்:


இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! விண்ணப்ப தேதி அறிவிப்பு - விவரம்! 


Madurai Kamaraj University: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?