தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பலகலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலை கால்நடை படிப்புகள்
இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பலகலைக்கழகம் அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பத்தை செப்டம்பர் 12 முதல் 26ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோம் adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளான, ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) மற்றும் நான்காண்டுகள் கொண்ட கால்நடை தொழில்நுட்ப படிப்புகளுக்கும் செப்டம்பர் 12ம் தேதி காலை 10 மணி முதல் செப்டம்பர் 26ம் தேதி மாலை 5மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் https://tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியர்:
அதேபோல், அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர், மற்றும் அயல்நாட்டினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் இனையதள விண்ணப்ப வழிமுறைகள் போன்ற விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இனையதளம் மூலமும் அறிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.