வெந்து தணிந்தது காடு படத்தின் நடிகை சித்தி இதானி நேர்காணல் ஒன்றில் அப்படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக்கத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கௌதம் மேனன் - எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தின் கதை ஜெயமோகன் எழுதியிருந்தார். அதை கௌதம் மேனன் விரிவாக்கம் செய்து திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் நடிகை சித்தி இதானி நேர்காணல் ஒன்றில் படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் என்னால் கௌதம் மேனன் படத்தின் ஹீரோயின் என்பதை நம்பவே முடியவில்லை என்றும், சிம்புவுடன் நடித்தது சூப்பரான அனுபவம் என தெரிவித்துள்ளார். மேலும் முதலில் நான் படத்தில் நடிப்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என சொல்லி சிம்புவும் நானும் இருக்கும் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அந்நேரம் நான் மும்பையில் ஷூட்டிங்கில் இருந்தேன். அன்றைக்கு நான் ரொம்ப சோர்வாக ஒருவித யோசனையிலேயே இருந்தேன்.
திடீரென என் போனை எடுத்து பார்த்தால் 100K ஃபாலோயர்ஸ்களை கொண்ட எனது சமூக வலைத்தளப்பக்கம் திடீரென 120K நொடிப்பொழுதில் உயர்ந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அப்போது கூல் சுரேஷ் ஒவ்வொரு வாரமும் வெந்து தணிந்தது காடு படத்தின் பெயரை சொல்லி குரல் கொடுப்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரது ரசிகை நான். காரணம் எங்கள் படத்தின் புரோமோஷனுக்கு அவர் செய்யும் பணி மிகச்சிறப்பானது எனவும் தெரிவித்துள்ளார்.