குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பதிவெண்களும் டிஎன்பிஎஸ்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

Continues below advertisement


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/Document/Counselling/sel_COUNS_JA_VAO.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, பதிவு எண்களைக் காணலாம்.


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், நில அளவையர் (Surveyer), வரைவாளர் (Draftman),வரி தண்டலர் (Bill Collector), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist), பண்டக காப்பாளர் (Store Keeper) உள்ளிட்ட பணிகளுக்காக  உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.


ALSO READ | Chandrayaan 3 Facts: விண்ணில் சீறப்போகும் சந்திரயான் - 3..! சந்திரயான் 2-லிருந்து எப்படி எல்லாம் மேம்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?


இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சரியாக 8 மாதங்கள் ஆன பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகின.


இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் நடைபெற்றன. தொடர்ந்து குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும்‌ சரியான சான்றிதழ்களை ஜூன் 5 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை பதிவேற்றம்‌ செய்தனர். 


இந்த நிலையில், குரூப் 4 தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவை ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் பதிவெண்களும் டிஎன்பிஎஸ்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 


தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/Document/Counselling/sel_COUNS_JA_VAO.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, பதிவு எண்களைக் காணலாம்.


ஜூலை 20 தொடங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. (ஞாயிற்றுக் கிழமை, மொஹரம் தவிர்த்து), இது டிஎன்பிஎஸ்சி, எண். 3, டிஎன்பிஎஸ்சி சாலை, சென்னை-  600 003 என்ற முகவரியில் நடைபெறும். 


தனிப்பட்ட வகையில் அனுப்பப்படாது


சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்த தகவல் டிஎன்பிஎஸ்சி இணையதளம், தேர்வர்களின் இ- மெயில், குறுஞ்செய்தி வாயிலாக மட்டுமே அனுப்பப்படும். தனிப்பட்ட வகையில் தபாலில் அனுப்பப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


இதையும் வாசிக்கலாம்: College Fees Refund: இந்த மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி தாங்க.. யுஜிசி அதிரடி உத்தரவு