SSC, CGL உள்ளிட்ட மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் பயிற்சிக் கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது.


மூன்று ஆண்டுகளில் பத்து லட்சம் பணியிடங்கள் மத்திய அரசுத் துறைகளில் நிரப்பப்படும்  என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மத்திய அரசின் 19 வேலை வாய்ப்பு அறிவிக்கைகள் வெளிவர இருப்பதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயும்  மேலும் 3 லட்சம் வேலை வாய்ப்புக்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது


மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பணியாளர் தேர்வு வாரியம் (Staff Selection Commission) SSC/ CGL தேர்வை நடத்த உள்ளது. 


இதற்குக் குறைந்தபட்சத் தகுதி பட்டப் படிப்பு ஆகும். CHSL தேர்வுக்குத் தகுதி  12ஆம் வகுப்பாகவும் MTS தேர்வுக்குத் தகுதி  10ஆம் வகுப்பாகவும் உள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் பயிற்சிக் கட்டணம் இல்லாமல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இணைய வழி மாதிரித் தேர்வுடன் கூடிய பயிற்சியையும் நேர்முக பயிற்சியையும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் (Dr. Ambedkar Education and Employment Coaching Centre) வழங்குகிறது. 


இவ்வாண்டு மத்திய அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தகுதியான மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்க தயாராக உள்ளது. மாணவர்களின் கல்வித் தகுதியை முழுமையாக அறிந்து  கொண்டு விண்ணப்பிக்க எஸ்எஸ்சி தேர்வாணையத்தின் இணையதளத்தை  ( www.ssc.nic.in ) பார்க்கவும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 (நாளை) ஆகும். 


தலித்துகள் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் அம்பேத்கர் பயிற்சி மையத்தில் படித்த 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 


வேலை தேடுபவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் கல்லூரிக்கு செல்பவர்களுக்கு பயன்படும் வகையில் வார இறுதி நாட்களில்  வகுப்பு நடத்தப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை  வகுப்புகள் வாரந்தோறும் நடந்து வருகின்றன. விரும்பும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு மாணவர்கள் எஸ்எஸ்சி உட்பட மத்திய மாநில அரசுத் தேர்வுகளில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.


பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்வதுடன், வயது மற்றும் இருப்பிடச் சான்று நகலுடன்,ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் கொண்டு வர வேண்டும். 


பயிற்சி நடைபெறும் இடம்


Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,
சிஐடியு அலுவல கட்டிடம், 2வது தளம், 
6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ரஹாரம், 
ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.


பயிற்சி பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்


செளந்தர்        90950 06640
அமலா              63698 74318.
ஜனனி              97906 10961
நாகமணி         85085 47466 
வாசுதேவன்‌.  94446 41712


மாணவர்கள்  நம்பிக்கையோடு  உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை  பெற முடியும்.


மேலும் விவரங்களுக்கு- ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன்-  9444641712 


இதையும் வாசிக்கலாம்:


SSC CGL Recruitment: அரசு வேலை வேண்டுமா? 7500 பணியிடங்கள்; விண்ணப்பிக்க நாளை கடைசி! மறந்துடாதீங்க மக்களே!