எஸ்.எஸ்.சி வேலைவாய்ப்பு:

SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காலியாக உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) பணிக்கான 7500 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் / சட்டப்பூர்வ அமைப்புகள்/ தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் SSC
பணியின் பெயர் Combined Graduate Level (ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு)
பணியிடங்கள் 7500(தோராயமாக)
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online

எஸ்.எஸ்.சி தேர்வு

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

தேர்வு மையங்கள்:

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 01 மையத்திலும், தமிழ்நாட்டில் 07 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 03 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெற உள்ளது.

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (CGL ) தேர்வின் மூலம்  Assistant Section Officer, Sub Inspector, Assistant Audit Officer உள்ளிட்ட பல்வேறு பணிக்கான காலியாக உள்ள 7500 (தோராயமாக) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு:

8-27, 18-30, 18-32 மற்றும் 20-30 வயதிற்குள் உள்ள வெவ்வேறு பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அறிவிக்கப்பட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் குறைந்தபட்சமாக ஒரு இளங்கலை டிகிரி படித்திருக்க வேண்டும். 

CGL ஊதியம்:

பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay Level-4 முதல் Pay Level-8 வரையிலான ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு முறை:

SSC CGL 2023 கணினி அடிப்படையிலான தேர்வு அடுக்கு-I மற்றும் அடுக்கு-II என இரண்டு முறையில் நடத்தப்பட இருக்கின்றன. அடுக்கு-II தேர்வில் விண்ணப்பதாரர்களின் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் மட்டுமே தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/SC/ST/PwD/ESM தவிர) ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் கட்டணத்தை மே 4 வரை செலுத்தலாம்.

எப்படி விண்ணப்பிக்கலாம்..? 

  • அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in க்கு செல்லவும்.
  • முகப்பு பக்கத்தில் (ஹோம் பேஜ்) பதிவு இணைப்பை கிளிக் செய்யவும்
  • போர்ட்டலில் உள்நுழைந்து SSC CGL 2023க்கு விண்ணப்பிக்கவும்
  • ஆவணங்களை (documents) பதிவேற்றம் செய்து, கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்கவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.05.2023

இது தொடர்பான முழு விவரங்களை https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_03042023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.