உலகளவில் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் இந்திய பள்ளிகள் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளன.
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எதிர்கால தலைமுறைகளுக்கு கல்வி, மருத்துவம், பணி என அனைத்திலும் சிறந்த ஒன்றையே தர நாம் அனைவரும் நினைக்கிறோம். எல்லா துறைகளிலும் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டாலும் அவற்றில் சிறந்தது எது என்பதை தேர்வு செய்வதற்குள் நமக்கு தலை சுற்றி விடும். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த 'டி4 எஜூகேஷன்' என்ற நிறுவனம் உலகளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்யும் போட்டியில் களமிறங்கியுள்ளது.
இந்த போட்டியானது சமூகத்துடன் இணைந்து செயல்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு, இடர்பாடுகளில் இருந்து மீளுதல், ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் பள்ளிக்கு தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.1.75 கோடி பரிசாக வழங்கப்படும். இப்போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளில் 10 பள்ளிகள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றது.
EXCLUSIVE: எல்கேஜி, யூகேஜி மூடல் புதிய கல்விக்கொள்கையின் அங்கமா? ஆசிரியர்கள் சொல்வது என்ன?
இந்த 10 பள்ளிகளில் இந்தியாவை சேர்ந்த 5 பள்ளிகள் இடம்பெற்று சாதனைப் படைத்துள்ளது. சமூகத்துடன் இணைந்து செயல்படும் பிரிவில் மும்பையின் கோஜ் பள்ளி மற்றும் புனேவின் பி.சி.எம்.சி. பள்ளிகள் இடம் பெற்றுள்ளது. புதிய கண்டுபிடிப்பு பிரிவில் மும்பையைச் சேர்ந்த சி.என்.எம். பள்ளி, டில்லியின் எஸ்.டி.எம்.சி. ஆகியவையும், இடர்பாடுகளில் இருந்து மீளுதல் பிரிவில் மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள 'சமாரிட்டன் மிஷன்' பள்ளியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இறுதிப்போட்டி அக்டோபர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த இந்திய பள்ளிகள் வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்