ஐஐடி சென்னை சார்பில் இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக ஐஐடி வளாகம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி சென்னை கையெழுத்திட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஸான்ஸிபார் அதிபர் ஹுசேன் ஐ ம்வினியி முன்னிலையில் நேற்று (புதன் கிழமை) கையெழுத்தானது. 


ஐஐடி சென்னை சார்பில் பல்வேறு திட்டங்கள் மாணவர்களுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட்டுகள், நன்கொடையாளர்கள் மூலம் சென்னை ஐஐடி, முன்னெப்போதையும் விட அதிக அளவாக 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நிதி திரட்டி, செய்திகளில் இடம் பிடித்தது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதியாண்டில் திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும்.


முதன் முதலான ஐஐடியில் பிஎஸ்சி படிப்பு


ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பை ஜூன் 2020-ல் அறிமுகப்படுத்தியது. 


தலைசிறந்த கல்வி நிறுவனம்


ஆண்டுதோறும்  தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework)  என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இதில் தொடர்ந்து 5-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


அனைவருக்கும் ஐஐடிஎம்


சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளைச்‌ சேர்ந்த 500 அறிவியல்‌ ஆசிரியர்களுக்குப்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள்‌ வாயிலாக 1 லட்சம்‌ மாணவர்களுக்குக் கற்பித்தல் கடத்தப்படும். இதற்குப் பயன்‌ தரும்‌ வகையில்‌ மின்னணு செய்முறைப் பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் வழங்கி உள்ளார்.


மத்திய அமைச்சர், ஸான்ஸிபார் அதிபர் இடையே ஒப்பந்தம்


கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை ஓரத்தில் உள்ள தான்சானியாவின் ஸான்ஸிபார் என்னும் தன்னாட்சிப் பகுதியில், ஐஐடியின் புதிய வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஸான்ஸிபார் அதிபர் ஹுசேன் ஐ ம்வினியி முன்னிலையில் நேற்று (புதன் கிழமை) கையெழுத்தானது. 


முன்னதாக தேசிய கல்விக் கொள்கை 2020-ல், சிறப்பாகச் செயல்படும் இந்திய பல்கலைக்கழகங்கள், வெளி நாடுகளில் வளாகங்களை அமைத்துக் கொள்ள ஊக்குவிக்கப்படும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


இதையும் வாசிக்கலாம்: College Fees Refund: இந்த மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திருப்பி தாங்க.. யுஜிசி அதிரடி உத்தரவு