கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளன என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டுக்கான தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு தள்ளிப் போனது. கடைசியாகக் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 24ஆம் தேதி (20.12.2021 - 24.12.2021) வரை நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 


இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா இன்று ( ஜனவரி 29 ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


''எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வை எழுதிய தனித்‌ தேர்வர்களுக்கு‌ 01.02.2022 அன்று பிற்பகல்‌ 2.00 மணிக்குத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. சம்பந்தப்பட்ட தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ நோட்டிஃபிகேஷன் என்ற பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.


அதில்‌ ESLC (Private Appearance) Examination என்ற பக்கத்தில்‌ ESLC Result Dec 2021 என்பதனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினை (DD/MM/YYYY) பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது''.


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.


இதையும் வாசிக்கலாம்:


1. Tamil Nadu School Education | இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விவரம்.


2. Madurai | ஒரே அரசுப்பள்ளியில் இருந்து மருத்துவராகும் 4 மாணவிகள்: அசத்தும் மதுரை மாநகராட்சிப்பள்ளி


3. ABP exclusive | பள்ளிகள் திறப்பு இப்போது அவசியமா? ஆபத்தா?- தொற்றுநோய் மருத்துவர் பேட்டி


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண