பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மின்னஞ்சல் கட்டாயம்:
பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 9-ந் தேதி முதல் வரும் 12-ந் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடையே தகவல்களை பெற மின்னஞ்சல் முகவரி ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்லூரிகள் மின்னஞ்சல் வாயிலாகவே தகவல்கள் அனுப்பும் என்பதால் மின்னஞ்சலை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவைத் தொடர்ந்து பள்ளிகளில் நாளை முதல் மின்னஞ்சல் உருவாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது.
பொதுத்தேர்வுகள்:
வரும் மார்ச் 13-ந் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இதுதவிர, வரும் மார்ச் 14-ந் தேதி முதல் வரும் ஏப்ரல் 5-ந் தேதி வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை 8.50 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் 6-ந் தேதி முதல் ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
12 பொதுத்தேர்வு அட்டவணை:
மார்ச் 13-ந் தேதி மொழிப்பாடம்,
மார்ச் 15-ந் தேதி ஆங்கிலம்,
மார்ச் 17-ந் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல், சிறப்பு தமிழ், தொடர்பு ஆங்கிலம்
மார்ச் 21-ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
மார்ச் 27-ந் தேதி – கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல்
மார்ச் 31-ந் தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
மேலும் படிக்க Vice Chancellor Appointment: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை., கொடைக்கானல் தெரசா பல்கலை. துணை வேந்தர்கள் நியமனம்: ஆளுநர் உத்தரவு:
மேலும் படிக்க: NEET UG 2023: நீட் 2023 தேர்வு விண்ணப்பப் பதிவு எப்போது?- NTA தகவல்.. விவரம் உள்ளே!
மேலும் படிக்க: