தமிழக ஆளுநர் ரவி ஏதோ ஒரு எண்ணத்திற்காக “தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்கலாம்” என்று கூறியுள்ளார். அதையெல்லாம் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழ்நாடு என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை, வரலாறு எந்த அளவுக்கு ஆளுநருக்கு தெரியும் என தெரியவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் அருகேயுள்ள பூண்டி, கஞ்சனூர், உள்ளிட்ட நான்கு புதிய தாக கட்டப்பட்ட சத்துணவு கூடங்கள், பள்ளி ஆய்வகங்களை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு துவங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சியர் மோகன் திமுக விக்கிரவாண்டி எம் எல் ஏ புகழேந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  


அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி கூறியதாவது :-


தமிழக ஆளுநர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று கூறலாம் தெரிவித்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி...தமிழ்நாடு என்பது சட்டமன்றத்திலையே நிறைவேற்பட்ட கருத்து அது ஒன்றும் புதியதல்ல, இந்தியாவின் அரசியலமைப்பில் தமிழ்நாடு, தமிழகம் என்ன வித்தியாசம் உள்ளது என்றும் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தின் போதே கூட்டாட்சியா ஒற்றை ஆட்சியாக உருவாக்க வேண்டும் என்ற  விவாதம் ஏற்பட்டபோது அம்பேத்கர் யூனியன் ஆப் ஸ்டேட் என்று கொண்டு வந்தார்.


அந்த  அடிப்படையில் தான் யூனியன் ஆப் ஸ்டேட் என்பதை கூறுகிறோம் ஸ்டேட் என்றால் நாடு யூனியன் என்றால் ஒன்றியம் அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து பேசிய அவர் அரசியலமைப்பின் படி செயல்படுகிற ஒரு முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் எந்த வேறுபட்ட கருத்துமில்லை அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு என்கிறோம் அதில் எந்த தவறும் இல்லை அது தான் உண்மையான கருத்து ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை அவர் பல்வேறு நிகழ்வுகளில் இது போன்று பேசி வருவதாக கூறினார்.


தமிழ்நாடு என்பது சரியான வார்த்தை அதில் எந்த தவறுமில்லை சட்டமன்றத்திலையே நிறைவேற்றப்பட்ட கருத்து மஷாராஷ்டிராவில் ராஷ்ரா என்றால் நாடு என்று அர்த்தம் ஏதோ ஒரு எண்ணத்திற்காக அவர் சொல்லி இருக்கிறார் அதையெல்லாம் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் “ஜனகனமனகதி என்ற பாடலிலையே திராவிடம்” என்ற சொல் வந்துள்ளது. அந்த அடிப்படையில் தான் தமிழக முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருவதாகவும், ஆளுநரை வேண்டி கேட்டுக்கொள்வது என்னவென்றால் தமிழக அரசு என்ன செய்கிறதோ அதை நியமன பதவியிலுள்ள ஆளுநர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்வதாக கூறினார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.