தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, தேனி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
17 மாவட்டங்கள்:
திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தேனி , தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய 17 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் , அதாவது இரவு 7 மணிவரை, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரம்:
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேலும், மழை காலங்களில், பினவரும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பழுதடைந்த மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் இருக்கவேண்டாம். பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்துவரும் பொதுமக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும். மழை மற்றும் வெள்ளநீர்தேங்கும் இடங்களில் உள்ள கால்நடைகளை வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லவேண்டும். மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுதல்கூடாது.