சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி..எஸ்.சி. (The Central Board of Secondary Education (CBSE)) தெரிவித்துள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 5,79,884 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடந்த தேர்வுகான முடிவுகளை https://ctet.nic.in/ -என்ற தளத்தில் அறியலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு
கடந்தாண்டு மத்திய ஆசிரிய தகுதித் தேர்வு கடந்த 2022,டிசம்பர் 28-ந் தேதி முதல் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை காண்பது எப்படி?
https://cbseresults.nic.in/ctet/CtetDec22.htm - என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
CTET result - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அந்தப் பகுதியில் தேவைப்படும் தகவல்களை பதிவிடவும்.
பதிவு எண், தொடர்பு எண் உள்ளிட்டவைகளை குறிப்பிட வேண்டும்.
சி.பி.எஸ்.சி. சிடெட் தேர்வு முடிவுகள் ஸ்கிரில் தெரியும்.
உங்களுடைய தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
மேலும் வாசிக்க..
Metro: மெட்ரோவில் போறீங்களா சென்னை மக்களே...! வெளியான முக்கிய அறிவிப்பு