சென்னையில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் என்ற பெயரில் சிலர் பண வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதையடுத்து, இதுதொடர்பாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை. பரிசோதகர் என்ற பெயரில் செயல்படுவோர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.