தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 3 ம் அலையை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எவ்வாறு நடைபெறும் என்று கேள்வி எழுந்தது. சென்னையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்த பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 








அதில், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும், இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தும் நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் எடுக்கப்பட்ட பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும்.அதேபோல்,  ஆன்லைன் தேர்வு முறையில் முறைக்கேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 


மேலும் வாசிக்க: Student Suicide | தஞ்சை மாணவி மரணம் தொடர்பாக காவல்துறைக்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? அண்ணாமலை கேள்வி!


தொடர்ந்து, பேசிய அமைச்சர் பொன்முடி வருகின்ற 29 ம் தேதி சென்னை பல்கலை கழகத்தில் உள்ள கல்லூரி முதல்வர்களை அழைத்து பேசி சென்னை பல்கலைக்கழக கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்யும் விடைத்தாள்கள் வந்து சேர்வதற்கு தாமதமானாலும் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 


இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு வைக்க காரணம் நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட கொரோனா பேட்ஜ் என்ற அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தனக்கு வரும் புகார்களின் அடிப்படையிலேயே இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்த பல கட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


HBD Sundar C | ‛கலகலக்கும் காமெடி.. பக்கா கமர்ஷியல்... மக்களை மகிழ்விக்கும் கலைஞன் சுந்தர் சி பிறந்தநாள்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் வாசிக்க:Harish Uthaman Wedding | மீண்டும் திருமணம்.. காதலியை கரம் பிடித்தார் ஹரிஷ் உத்தமன்..