கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கடந்த வாரங்களில் நூற்றுக்கணக்கில் இருந்த தொற்று பாதிப்பு தற்போது ஆயிரக்கணக்காக மாறியுள்ளது. ஒரேநாளில் 1186 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 5944 பேருக்கு நடந்த சளி பரிசோதனையில் இதனை பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், குருந்தன்கோடு, மேல்புறம், முன்சிறை ராஜாக்கமங்கலம், தோவாளை என பல தாலுகாகளிலும் தினசரி தொற்று 100 ஐ கடந்துள்ளது, நாகர்கோவில் மாநகரப் பகுதியில் அதிகபட்சமாக சுமார் 300 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், நாகர்கோவில் மாநகர பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .
தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையில்தான் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் வீட்டு தலைமையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிக பாதிப்பு ஏற்படும் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் இருமல் உடல்வலி பாதிப்புகள் இருக்கிறதா? என ஆய்வு செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் என நாளுக்கு நாள் அரசு அதிகாரிகள் தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது .குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் , நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, கோட்டார் காவல் நிலையம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு தொற்று ஏற்பட்ட காரணத்தினால் காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.
நோய் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என அதிகாரிகள் அறிவுரை அளித்துள்ளனர் மீறி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.கொரோனா படுவேகமாக பரவி வந்தாலும் உயிரிழப்பு ஏற்படுவது குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.