மாநாகரம் ஹிந்தி ரீமேக் - டப்பிங்கை நிறைவு செய்தார் விஜய் சேதுபதி

மாநகரம் ஹிந்தி ரீமேக்கின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்தார்.

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான படம் மாநகரம். 2017ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் உளிட்டோர் நடித்திருந்தனர். படமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

Continues below advertisement

இப்படத்துக்கு பின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் அடுத்ததாக விஜய்யை வைத்து மாஸ்டர் இயக்கினார். அந்தப் படமும் ஹிட்டானதை அடுத்து கமல் ஹாசனை வைத்து அவர் தற்போது விக்ரம் படத்தை இயக்கிவருகிறார்.


இதற்கிடையே மாநகரம் படத்தை ஒளிப்பதிவாளரும், இயக்குநராம சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்துவருகிறார். ஹிந்தியில் உருவாகும் மாநகரம் படத்துக்கு மும்பைகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் இதில் விக்ராந்த் மாஸ்ஸே, ஹிர்து ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முனிஷ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் ‘மும்பைகர்’ படத்தில் விஜய் சேதுபதிக்கான டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.  இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 

ஹிந்தியில் மும்பைகர் படத்தை தவிர்த்து‘தி ஃபேமிலி மேன்’ இயக்குநர்களான ராஜ் -டிகே இயக்கி வரும் ஒரு வெப் சீரிசிலும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola