நடிகர் வைகைப்புயல் வடிவேலுவின் மகன் சுப்பிரமணி, இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல முக்கியத் தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ... அவரது பதில்களை தொகுத்து வழங்கிறோம்.



 

நடிக்க வேண்டும் என்கிற ஆசை. உண்மையான ஆசையாக இல்லையாமல், திடீர் தொந்தரவு செய்கிறார்கள். கொஞ்ச நாள் ஆகும். ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி போல நடிக்க வேண்டும். அந்த திறமை என்னிடம் உள்ளது. 

எனக்கு நல்ல இயக்குனர் அமைந்தால் என் திறமையை காட்டுவேன். எனக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய இயக்குனர் வேண்டும். என் குல தெய்வம் அய்யனார் மீது ஆணையாக நான் நடிப்பேன். 

அப்பாவிடம் என் ஆசையை தெரிவித்தேன். நடிப்பா.. அது அவ்வளவு எளிதல்ல. அதிகாலையில் எழுந்து செல்ல வேண்டும், நிறைய கடினமான முயற்சிகள் அதில் இருக்கும் என அப்பா என்னிடம் கூறினார். அப்பாவின் காமெடியில் அதிகம் ரசிப்பை பெற்ற படம் வின்னர். அதில் அப்பா நிறைய ரிஸ்க் எடுத்தார். வீட்டிற்கு வந்த கால் வலியால் அழுவார். மானஸ்தன் படத்திலும் அது போன்ற வேதனையை அவர் சந்தித்தார். வலது காலில் இன்று அவருக்கு காயம், வலி உள்ளது. 

 

விவேக் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அவரை சந்தித்தேன். அப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நானும் அப்பாவும் சென்று பார்த்தோம். அவர் நன்றாக பேசினார். கவுண்டமணி சார் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அவர் மீது பைத்தியமான ரசிகன். கவுண்டமணி சார் டயலாக்கை வீட்டில் நான் பேசிக்கொண்டிருப்பேன். 

அப்பாவின ரெட் கார்டு பிரச்சனை தீர்ந்துவிட்டது. அவர்  மேலும் மேலும் படங்களில் நடிக்க வேண்டும். நானும் அப்பா உடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். நானும் கூத்துபட்டறையில் நடிப்புக்கு என்ன தேவை என்பதை கத்துக் கொண்டேன். வடிவேலு பெயரை சொன்னால் அவர்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்காது என அவதூறு பரப்பினார்கள். 

ஆர்எஸ்எஸ் மாதிரி சர்வீஸ் செய்ய வேண்டும் என்று ஆசை. நான் நிறைய உதவி பண்ணிருக்கேன். ஆர்எஸ்எஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களுடன் நான் பேசியிருக்கிறேன். ஸ்கூல் நேரத்தில் சாலையில் நின்று நிறைய உதவி செய்திருக்கிறேன். எனக்கு பிடித்த தெய்வம், முருகன். 

டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். விஜய் டிவி, சன்டிவி என்னைத் தேடி கேட்டால் நான் நடிப்பேன். அப்பா மூலம் வந்தாலும் நான் நடிப்பேன். என்னை நடிக்க வைத்தால் நான் அதை தக்க வைத்துக் கொள்வேன், என்றார்.

இதோ அவர் அளித்த பேட்டி வீடியோ...


 

பேட்டியில் ஒரு சந்தேகம் எழுகிறது. அவர் தெளிவாக ஆர்.எஸ்.எஸ். என்கிறார். கேள்வி கேட்பவரும் ஆர்.எஸ்.எஸ்., என்றே கேட்கிறார். ஆனால், அவர் பேசும் போது குறிப்பிடுவதை பார்க்கும் போது என்.எஸ்.எஸ்., ஆக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், அது நம்முடைய புரிதல் தான். அவர் பேட்டியின் போது எந்த இடத்திலும் ஆர்.எஸ்.எஸ்., என்கிற வார்த்தையை மறுக்கவில்லை. மாறாக, அதை அமோதித்தே பேசுகிறார்.