தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.



பின்னர் அவர் தெரிவித்ததாவது: 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான அரசுப் பொதுத்தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு இன்று 13.03.2023 அன்று துவங்கி வரும் 03.04.2023 வரையிலும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு நாளை 14.03.2023 துவங்கி வரும் 05.04.2023 வரையிலும் நடக்கிறது. மேலும் மற்றும் பத்தாம். வகுப்பிற்கு வரும்ட ஏப்ரல் 6ம் தேதி அன்று துவங்கி 20.04.2023 வரையிலும் நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டுமற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வுகளை 225 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மொத்தம் 112 மையங்களில் தேர்வுஎழுத உள்ளனர். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வினை 409 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் மொத்தம் 133 மையங்களில் எழுதஉள்ளனர்.

மேல்நிலை இரண்டாம் ஆண்டில் 14641 மாணவர்களும் 15247 மாணவிகளும் மொத்தம் 29888 மாணவ, மாணவியரும், மேல்நிலை முதலமாண்டு பொதுத்தேர்வை 12492 மாணவர்களும் 14312 மாணவிகளும் மொத்தம் 26804 மாணவ, மாணவிகளும் பத்தாம் வகுப்பில் 15679 மாணவர்களும், 15501 மாணவிகளும் மொத்தம் 31180 மாணவஃமாணவியரும் பொதுத்தேர்வை எழுதஉள்ளனர்.

தேர்வுப் பணியில் 112 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 112 துறைஅலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், 27 வழித்தடஅலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், 1961 அறைக்கண்காணிப்பாளர்கள் 194 சொல்வதைஎழுதுபவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 281 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இம்மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வுஅறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காதுகேளாத, வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் தனியார் பள்ளிகள் இயக்கக துணை இயக்குநர் சம்பத்தை கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்டகாவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாசியர், மாவட்டஆய்வுஅலுவலர், ஊர்க்காவல் படைத்தலைவர் மற்றும் பிறதுறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வுமையங்களை திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வுமையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திடஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

2022-23ம் கல்வியாண்டில் அரசுப் பொதுத்தேர்வுகள் எழுதவுள்ள மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெறவேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களைபெறவேண்டும் எனவும் மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.