ஜெய்ப்பூரில் மூளைக்கட்டியினை அகற்றும்பொழுது காயத்ரி மந்திரத்தினைப் பாடிக்கொண்ட இருந்த முதியவருக்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


ஜெய்ப்பூர் சுருவைச்சேர்ந்த 57 வயதான ரித்மால் ராம் என்பவருக்கு தீடிரென வலிப்பு மற்றும் தற்காலிக பேச்சு இழப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இப்பிரச்சனையினை பொதுவாக அறுவை சிகிச்சைக் கொண்டு மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் சில சமயங்களில் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக இத்தகைய அறுவை சிகிச்சைகள் நாடு முழுவதும் மிகச் சில மையங்களில் மட்டுமே செய்ய முடியும். இந்நிலையில் தற்பொழுது மூளைக்கட்டியினால் பாதிக்கப்பட்ட முதியவருக்கு ஜெய்ப்பூர், நாராயணா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.கே. பன்சால் தலைமையிலானக் குழு முடிவெடுத்தது.



இதனையடுத்து குறிப்பிட்டத்தேதியில் பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சில நேரங்களில் அறுவைச்சிகிச்சை செய்யும் பொழுது சிறிய பிழை ஏற்பட்டால் கூட வாழ்நாள் முழுவதும் பேச்சுக்குறைபாடு ஏற்பட்டு விடும். எனவே 57 வயதான முதியவருக்கு மிகவும் நேர்த்தியாக மருத்துவர் குழுவினர் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். இவருக்கு சுமார் 4 மணி நேரமாக அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது. அந்நேரத்தில் நோயாளிகளிடம் பேச்சுக்கொடுத்துகொண்டே தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும். இல்லாவிடில் சரியான இடத்தில் சிகிச்சையினை மேற்கொள்ளமுடியாது. இப்படிப்பட்ட நிலையில் தான் மூளைக்கட்டி அறுவைச்சிகிச்சையின் போது 57 வயதான முதியவரிடம், மருத்துவர்கள் நீங்கள் யார்? என்ன பிரச்சனை? என்பது போன்று பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்தனர். இதோடு மட்டுமின்றி அறுவைசிகிச்சையின் போது காயத்ரி மத்திரத்தினையும் அவர் பாடிக்கொண்டே இருந்தமையால் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு எளிமையாக இருந்துள்ளது.


இந்த அறுவை சிகிச்சை குறித்து ஜெய்ப்பூர், நாராயணா மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை மூத்த ஆலோசகர் டாக்டர் கே.கே.பன்சால் தெரிவிக்கையில், நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும் பொழுது மூளைக்கட்டியினை அகற்றுவது சாத்தியமாகாது என தெரிவித்தார். மேலும்  அவர்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே இருக்கும் பொழுதுதான், மூளையின் மற்றப்பகுதிகள் பாதிப்படையாமல் சரியான இடத்தைக்கண்டறிந்து அறுவைச்சிகிச்சை செய்ய முடியும். இதுப்போன்று தான் 57 வயதான முதியவருக்கு நடத்தப்பட்ட மூளைக்கட்டி அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்டவர் காயத்ரி மந்திரத்தினை உச்சரிக்கவும், மருத்துவர்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்களின் கட்டளைகளை கேட்டு அதற்கேற்றார்போல் அவர் நடந்து கொண்டார். எனவேதான் எங்களுக்கு பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்ய உதவியது என கூறியுள்ளார்.



இதேபோன்று கடந்த  2018 ஆம் ஆண்டு  30 வயதான ஒருவருக்கு மூளைக்கட்டி அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, அவர் அனுமன் மந்திரத்தினை உச்சரித்தப்படியே இருந்துள்ளார். அவருக்கும் வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இத்தகைய தனித்துவமான சிகிச்சைக்கு Awake Craniotomy” or “Awake Brain Surgery” எனக் கூறப்படுகிறது. மருத்துவர்களுக்கு உதவி தெரிவித்த அந்த நோயாளி, இறைவனுக்கும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்