சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் முடிவை தெரிந்து கொள்ள இருக்கின்றனர்.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், செயல்முறை தேர்வு, யூனிட் தேர்வு, பருவத் தேர்வு ஆகிய தேர்வு முடிவுகளின் அடிப்படையில் இறுதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, 18,85,885 மாணவ மாணவிகள் சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக பதிவு செய்திருந்தனர். அதில், 17,13,121 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம், 91.46% ஆக இருந்தது. இது 2019-ம் ஆண்டை விட அதிகம்.
CBSE Board 12th Result 2020: சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: திருவனந்தபுரம் அதிக தேர்ச்சி சதவிகிதம்!
இரண்டு நாட்களுக்கு முன்பு, சி.பி.எஸ்.இ பண்ணிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால், பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 10 வகுப்பில் மாணவ மாணவிகள் சிறந்த 3 பாடங்களில் இருந்தும், 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 11 வகுப்பில் இறுதித் தேர்வு மதிப்பெண்களிலிருந்தும், 40 சதவிகிதம் மதிப்பெண்கள் 12 வகுப்பில் மாணவர்கள் தற்போது வரை எழுதிய பாடத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவற்றிலிருந்தும் கணக்கிடப்படும் (30:30:40).
மேலும் இந்த முறையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அது தொடர்பாக முறையிடலாம். மேலும், இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
CBSE Board 12th Result 2021 : சிபிஎஸ்இ மதிப்பெண் பட்டியல் வெளியானது- ரிசல்ட் செக் செய்வது எப்படி?