12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல்  இன்று பிற்பகல் 2 மணிக்கு  வெளியானது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு  சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. 

பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில்,  12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 10 வகுப்பில் மாணவ மாணவிகள் சிறந்த 3 பாடங்களில் இருந்தும், 30 சதவிகிதம் மதிப்பெண்கள் 11 வகுப்பில் இறுதித் தேர்வு மதிப்பெண்களிலிருந்தும், 40 சதவிகிதம் மதிப்பெண்கள் 12 வகுப்பில் மாணவர்கள் தற்போது வரை எழுதிய பாடத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவற்றிலிருந்தும் கணக்கிடப்படும் (30:30:40). 

மேலும் இந்த முறையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அது தொடர்பாக முறையிடலாம். மேலும், இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு கடந்த ஆண்டைப் போலவே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்பட்டு, மதிப்பீடு திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.  2019 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுடன் ஒப்பிடும் போது, கடந்தாண்டு தேர்வில், 95% மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 118.6%  ஆக அதிகரித்தது. மேலும், கடந்தாண்டு 90% மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை 65 சதவிகிதமாக அதிகரித்தது. 

Total number of candidates who scored >90% and >95% and above (2020) (Full Subjects)

 

>90% and above

Pass Percentage of students >90% above

>95% and above

Pass Percentage of students >95% above

Total Candidates

157934

13.24

38686

3.24

 

 

Overall Pass Percentage (Full Subjects)

Year

Registered

Appeared

passed

Pass%

Increase in pass%

2019

1218393

1205484

1005427

83.40

5.38 %

2020

1203595

1192961

1059080

88.78

 

சிபிஎஸ்இ கல்விமுறையில் கொண்டு வந்த சில சீர்திருத்த நடவடிக்கைகள் இதற்கொரு காரணமாக இருந்தாலும், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட  மதிப்பீடு திட்டமும் மிக முக்கிய காரணமாக அமைந்தது.